sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விட்டுச்சென்ற தெரு நாய்கள் அதிகம்

/

விட்டுச்சென்ற தெரு நாய்கள் அதிகம்

விட்டுச்சென்ற தெரு நாய்கள் அதிகம்

விட்டுச்சென்ற தெரு நாய்கள் அதிகம்


ADDED : அக் 18, 2025 12:04 AM

Google News

ADDED : அக் 18, 2025 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டல கூட்டம், மண்டல தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பேசியதாவது:

ராஜேந்திரன், (இ.கம்யூ.): மழைக் காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் புகுவதால், ஓம் சக்தி கோவில் முன் செல்லும் சாக்கடை கால்வாயை விரிவுப்படுத்த வேண்டும். குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடுகளை புதுப்பிக்க வேண்டும்.

முத்துசாமி (அ.தி.மு.க.): குப்பை போடும் இடங்களில் பிளீச்சிங் பவுடர் போடுவதில்லை. இத னால், மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது.

செழியன் (த.மா.கா.): விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்.

கோபால்சாமி, (தி.மு.க.): பொது கழிப்பறைகளை பாதாள சாக்கடையுடன் இணைக்க வேண்டும்.

கவிதா (அ.தி.மு.க.): அறுவை சிகிச்சை முடிந்தபின், கூடுதல் நாய்களை வார்டில் விட்டு சென்று விட்டுள்ளனர். இதனால், மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்பட்டுள்ளது. குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறையே வருகிறது.

இந்திராணி (அ.தி.மு.க.): வார்டில் புதிய தெரு விளக்கு முழுமையாக பொருத்தப்படவில்லை. ஏற்கனவே, பொருத்திய விளக்குகள் சரியாக எரிவதில்லை.

வேலம்மாள் (திமு.க.) : வார்டில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதிகாரிகள் பிடிக்க வருவதில்லை.

மாலதி (தி.மு.க.): உப்பு தண்ணீர் வினியோகத்தில் பழுது ஏற்பட்டால், சரி செய்ய ஆட்கள் வருவதில்லை.

கோவிந்தராஜ் (தலைவர்): தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் வெளியூரில் இருந்து வார்டுக்கு, 10 பேர் 15 வார்டுக்குஎன மொத்தம், 150 பணியாளர்களை கொண்டு சாக்கடை கால்வாய்துார் வாரப்படும். மழை காலத்தையொட்டி, நல்லாறு துார் வாரப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us