/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாராயண கவிமணி மண்டப படிப்பகத்தில் இருக்கை இல்லை
/
நாராயண கவிமணி மண்டப படிப்பகத்தில் இருக்கை இல்லை
ADDED : ஜூன் 13, 2025 09:56 PM

உடுமலை; உடுமலை நாராயணகவிமணி மண்டபத்தில், போட்டித்தேர்வுக்கான படிப்பகத்தில், இருக்கை வசதியின்றி இளைஞர்கள் பாதித்து வருகின்றனர்.
உடுமலை குட்டைத்திடல் பகுதியில், நாராயண கவிமணி மண்டபம் உள்ளது. இங்குள்ள அரங்கில், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் அரசு போட்டித்தேர்வுகளுக்காக இளைஞர்கள் தயாராகும் வகையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுால்கள் உள்ளன.
குறுகிய வளாகமாக உள்ளதால், அதிகளவு இளைஞர்கள் மற்றும் பொது அறிவு நுால்கள் படிக்க வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மணி மண்டப வளாகத்தில், ரூ.10 லட்சம் மதிப்பில், போட்டித்தேர்விற்கான படிப்பகம் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு, இளைஞர்கள் அமர்ந்து படிக்கும் வகையில், டேபிள், சேர், மின்விசிறி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
புதிதாக அமைக்கப்பட்ட மையத்தில், மாணவர்கள், இளைஞர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.