/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் போதிய மின்விளக்குகள் இல்லை
/
பஸ் ஸ்டாண்டில் போதிய மின்விளக்குகள் இல்லை
ADDED : ஆக 07, 2025 09:11 PM
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில் மக்கள் காத்திருக்கும் போதிய விளக்குகள் வசதிகளும், இருக்கைகளும் இல்லாதால், கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை அமைந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட் வழியாக புறநகர் பஸ்களும், டவுன் பஸ்களும் வந்து செல்கின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கு செல்ல இங்கு வருகின்றனர்.
ஆனால், பஸ் ஸ்டாண்டில் மக்கள் அமரும் இடங்களில் போதிய மின்விளக்குகள் இல்லை.
குடிநீர் வசதியும் இல்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நகராட்சியினர் பஸ் ஸ்டாண்டில், கூடுதல் மின்விளக்குகளும், குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.