/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகம்; கிராம மக்கள் தவிப்பு
/
பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகம்; கிராம மக்கள் தவிப்பு
பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகம்; கிராம மக்கள் தவிப்பு
பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகம்; கிராம மக்கள் தவிப்பு
ADDED : டிச 03, 2024 09:02 PM
உடுமலை; ஆனைமலை ரோட்டில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெரிசலை குறைக்க வேண்டும் என, தேவனுார்புதுார் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.
உடுமலை - ஆனைமலை ரோட்டில், தேவனுார்புதுார் சந்திப்பு அமைந்துள்ளது. பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்து தேவனுார்புதுாருக்கு, 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், ஆனைமலை ரோட்டில், சுற்றுலா வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆனைமலை ரோட்டில், தேவனுார்புதுார் உள்ளிட்ட பல இடங்களில், நெடுஞ்சாலைத்துறைக்குரிய இடத்தில் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளன.
ஆக்கிரமிப்புகளால், ரோட்டில் நிரந்தர நெரிசல் நிலவுகிறது. குறிப்பாக, தேவனுார்புதுார் சந்திப்பு பகுதியில், பஸ்கள் நிறுத்தும் போது பிற வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண சில ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. ஆனால், பணிகள் நிறைவு பெறாமல் பாதியில் கைவிடப்பட்டது. இதனால், மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது.
இது குறித்து தேவனுார்புதுார் மக்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: தேவனுார்புதுார் உள்ளிட்ட பல இடங்களில், ஆனைமலை ரோடு குறுகலாக அமைந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், முறையாக அளவீடு செய்து, எல்லைக்கற்கள் நட வேண்டும்.
தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை, முழுமையாக அகற்ற வேண்டும். தற்போது ஆனைமலை ரோட்டில், வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மாசாணியம்மன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்லும் வாகனங்கள் அதிகரித்துள்ளது.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆனைமலை ரோட்டை முழுமையாக விரிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.