/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இ.எஸ்.ஐ., குறித்த விழிப்புணர்வு இல்லை'
/
'இ.எஸ்.ஐ., குறித்த விழிப்புணர்வு இல்லை'
ADDED : ஜூலை 07, 2025 12:32 AM

பல்லடம்; பல்லடம் அடுத்த, அருள்புரம் ஜெயவிஷ்ணு கிளாத்திங் நிறுவனத்தில், இ.எஸ்.ஐ., சார்பில், தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இ.எஸ்.ஐ., கிளை மேலாளர் ராஜா முன்னிலை வகித்தார்.
இ.எஸ்.ஐ., கோவை மண்டல துணை இயக்குனர் இசக்கி சிவா பேசியதாவது:
இ.எஸ்.ஐ., காப்பீட்டாளருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. தொழிலாளர் செலுத்தும் பணத்தில்தான் தொழிலாளருக்கான அனைத்து பலன்களும் கிடைக்கின்றன. இது, தொழிலாளருக்கு மட்டுமன்றி உங்களை சார்ந்த குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.
பணியில் உள்ள போது மட்டுமின்றி, ஓய்வு பெற்ற பின்னும் பயன்கள் உள்ளன. நம்மை நம்பி உள்ள குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ., நிரந்தர பாதுகாப்பு அளிக்கிறது. சிறந்த மருத்துவர் கொண்டு அதிகப்படியான சிகிச்சைகள் இ.எஸ்.ஐ., மூலம் வழங்கப்படுகின்றன. ஆனால், தொழிலாளர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை.மருத்துவ சிகிச்சைகள், சேவைகள் சரியாக கிடைக்கிறதா இல்லையா என்பது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இ.எஸ்.ஐ., மூலம் எண்ணற்ற குடும்பங்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
உயிரிழந்த தொழிலாளி ரவிச்சந்திரன் பெரியசாமி, 50 என்பவரது மனைவி செல்வி, 45, மகள்ராகவி, 21 ஆகியோருக்கு, வாழ்நாள் ஓய்வூதியம் மற்றும் உதவிப்பயன் தொகைக்கான காசோலை மற்றும் ஆணை வழங் கப்பட்டன.