/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ச்சித்துறைக்கு கட்டடம் இல்லை! பட்டு விவசாயிகள் வேதனை
/
வளர்ச்சித்துறைக்கு கட்டடம் இல்லை! பட்டு விவசாயிகள் வேதனை
வளர்ச்சித்துறைக்கு கட்டடம் இல்லை! பட்டு விவசாயிகள் வேதனை
வளர்ச்சித்துறைக்கு கட்டடம் இல்லை! பட்டு விவசாயிகள் வேதனை
ADDED : ஆக 29, 2025 09:39 PM
உடுமலை, ;பட்டு வளர்ச்சித்துறைக்கு, உடுமலை நகரில் அலுவலகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலையில் உள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி, தரமான வெண்பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்வதால், கொள்முதல் மையங்களிலும் இப்பகுதி கூடுகளுக்கு தனியிடம் கிடைக்கிறது.
இத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்காக, மாநில அரசின் பட்டுவளர்ச்சித்துறை சார்பில், மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதே போல், மத்திய அரசின், மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் கீழ், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு துறைகளுக்கும், உடுமலையில் நிரந்தர கட்டடம் இல்லை. குறிப்பாக, பட்டு வளர்ச்சித்துறைக்கு தனியாக அலுவலக கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.
உடுமலையில் செயல்பட்டு வந்த பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம், சில ஆண்டுகளுக்கு முன் மைவாடிக்கு மாற்றப்பட்டது.
உடுமலையில் இருந்து, வெகுதொலைவில் அமைந்துள்ள போதிய பஸ் வசதி இல்லாத மைவாடிக்கு சென்று வருவது, விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள், அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல், அலைக்கழிக்கப்பட்டு வேதனைக்குள்ளாகின்றனர்.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. அதில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, விதை சான்று உட்பட துறைகளுக்கு தனியாக அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், அதிக விவசாயிகள் வந்து செல்லும் பட்டு வளர்ச்சித்துறைக்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. போதிய இடவசதி உள்ள நிலையில், அப்பகுதியிலேயே பட்டு வளர்ச்சி துறைக்கு கட்டடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.