/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை; பொதுமக்கள், முதியவர்கள் பாதிப்பு
/
பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை; பொதுமக்கள், முதியவர்கள் பாதிப்பு
பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை; பொதுமக்கள், முதியவர்கள் பாதிப்பு
பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை; பொதுமக்கள், முதியவர்கள் பாதிப்பு
ADDED : அக் 21, 2024 11:30 PM

உடுமலை : உடுமலை போடிபட்டி பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை இல்லாமல் தொடர்ந்து பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை ஒன்றியத்தில் மக்கள்தொகை அதிகமுள்ள ஊராட்சிகளில் போடிபட்டி பிரதானமாக உள்ளது. உடுமலை நகரையொட்டி இருப்பதால், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மேலும், மற்ற மாவட்டங்களிலிருந்து உடுமலை வழியாக மூணார், மறையூர், திருமூர்த்திமலை செல்வதற்கும் போடிபட்டி பிரதான வழித்தடமாக உள்ளது. உடுமலை சுற்றுப்பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் இப்பகுதியில்தான் உள்ளது.
மேலும், போடிபட்டியிலுள்ள அரசு பள்ளிக்கும் பெரும்பான்மையான மாணவர்கள் பஸ் பயணம் தான் மேற்கொள்கின்றனர். பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையம் உள்ளது. அந்த மையத்துக்கும் குழந்தைகளை பலரும் பஸ்சில் அழைத்து வருகின்றனர்.
இங்குள்ள முருகன் கோவில் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை. பள்ளிக்குழந்தைகள் காலையிலும், மாலையிலும் நீண்ட நேரம் நின்று காத்திருக்கின்றனர். முதியவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்களுக்கும் பஸ் வரும் வரை இடமில்லாமல், கோவில் வாசலில் தரைதளத்தில் அமர்ந்து கொள்கின்றனர்.
தற்போது மழை துவங்கிவிட்டதால், பஸ் ஸ்டாப்பில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நிற்பதற்கும் இடமில்லாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இங்கு, நிரந்தரமான நிழற்கூரை வசதி ஏற்படுத்த, உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

