/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால் அலுவலகத்தில் மின் விசிறி இல்லை
/
தபால் அலுவலகத்தில் மின் விசிறி இல்லை
ADDED : ஏப் 22, 2025 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அக்ரஹார வீதியில், தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு சேவைகள் பெறுவதற்காக தபால் அலுவலகத்தில் காத்திருக்கும் பொது மக்கள், மின் விசிறி இல்லாததால், அவதிக்குள்ளாகின்றனர்.
வெயில் தாக்கம் அதிகம் உள்ள மதிய நேரங்களில், வயதானவர்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர் வியர்வை காரணமாக மிகவும் சிரமப்படுகின்றனர். அலுவலர்களுக்கு மட்டுமே மின்விசிறி உள்ளது. பொதுமக்களுக்காக ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மின்விசிறி அகற்றப்பட்டு, அதன் மேல் பகுதி மட்டுமே தொங்கிக் கொண்டுள்ளது. மின் விசிறி பொருத்தப்பட வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.