/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தையில் சுற்றுச்சுவர் இல்லை ; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
/
சந்தையில் சுற்றுச்சுவர் இல்லை ; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
சந்தையில் சுற்றுச்சுவர் இல்லை ; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
சந்தையில் சுற்றுச்சுவர் இல்லை ; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
ADDED : டிச 12, 2024 05:50 AM

உடுமலை; உடுமலை நகராட்சி சந்தை, சுற்றுச்சுவர் இல்லாமல், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கின்றனர்.
உடுமலை நகராட்சி சந்தைக்கு சுற்றுப்புற பகுதிகளில் விவசாய விளை பொருட்களை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
மேலும், தினசரி சந்தையும் செயல்படுவதால், ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சந்தையில், ரோடுகள், வழித்தடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும், பழநி ரோடு பகுதியில், சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த தென்னங்கீற்று பந்தல் சரிந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, நகராட்சி சந்தை வளாகத்தில், கடைகள் அமைப்பதை முறைப்படுத்தவும், வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களை அகற்றவும், சுற்றுச்சுவர், குடிநீர், கழிப்பிடம் என அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

