/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் இணைப்பும் இல்லை... நிலத்தடி நீரும் மோசம்; ஸ்ரீமகாசக்தி நகர் தவிப்பு நீங்குமா?
/
குழாய் இணைப்பும் இல்லை... நிலத்தடி நீரும் மோசம்; ஸ்ரீமகாசக்தி நகர் தவிப்பு நீங்குமா?
குழாய் இணைப்பும் இல்லை... நிலத்தடி நீரும் மோசம்; ஸ்ரீமகாசக்தி நகர் தவிப்பு நீங்குமா?
குழாய் இணைப்பும் இல்லை... நிலத்தடி நீரும் மோசம்; ஸ்ரீமகாசக்தி நகர் தவிப்பு நீங்குமா?
ADDED : ஜூலை 07, 2025 12:15 AM

திருப்பூர், செட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா சக்தி நகர் குடியிருப்பு. தாராபுரம் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியிலிருந்து பூங்கா நகர் உள்ளிட்டபகுதிக்குச் செல்லும் வழியில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளது.
முத்தணம்பாளையம் ஊராட்சியாக இருந்தபோது குடியிருப்பு உருவானது. இங்குள்ள மனையிடங்கள் பெரும்பாலானவற்றில் வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறியுள்ளனர்.
ஆர்.ஓ., பொருத்தினால்தான்நீரைப் பயன்படுத்தலாம்
இவர்கள் தங்களுக்குள் ஒன்றிணைந்து ஒரு குடியிருப்போர் சங்கத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இதன் ஒருங்கிணைப்பாளர்களாக ராமசாமி, குமார், பழனிசாமி, தனபால் உள்ளிட்டோர் உள்ளனர்.
சங்க செயல்பாடுகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து சங்கத்தினர் கூறியதாவது:
குடியிருப்பு பகுதியில் எங்கும் பொதுக்குழாய் இணைப்பு அல்லது வீட்டு குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. அனைத்து வீடுகளிலும் சொந்தமாக போர்வெல் அமைத்து தான் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்துகிறோம்.
இப்பகுதிக்கு அருகே முன் டையிங் தொழிற்சாலை இருந்தது. இதனால், இங்கு நிலத்தடி நீர் துாய்மையானதாக இல்லை. குடிநீர் வேண்டு மானால், ஆர்.ஓ., இயந்திரம் பொருத்தி மட்டுமே இந்த நீரைப் பயன்படுத்த முடியும்.
சொட்டு நீர் பாசனத்தில்பசுமையான பூங்கா
இந்த லே அவுட் அமைத்த போது ஒரு ஆழ்குழாய் அமைக்கப்பட்டது. அதை சங்கம் சார்பில் பொறுப்பேற்று தற்போது அதை இயக்கியும், பராமரித்தும் வருகிறோம்.
இதிலிருந்து சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்தி, இங்குள்ள பூங்காவில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. அவ்வகையில் இங்குள்ள ஒரு பூங்கா முற்றிலும் மரக்கன்றுகள் நட்டு தற்போது நன்கு வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.
குடிநீர் இணைப்புஎப்போது கிடைக்குமோ!
''தற்போது 4வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படும் எனத் தெரிவித்து எங்கள் பகுதி வீடுகளில் குழாய் பதித்துள்ளனர். ஆனால் மாதக்கணக்காகியும் இது வரை இணைப்புக்கான எந்த நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.
வஞ்சி நகர் பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியிலிருந்து இங்கு குடிநீர் கொண்டு வருவதாகத் தெரிகிறது. விரைவில் வீட்டு இணைப்புகள் வழங்க வேண்டும். இதில் வரி விதிப்பில் வேறுபாடு என்ற பிரச்னை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதை முறைப்படுத்தி குழாய் இணைப்புக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்கின்றனர் ஸ்ரீ மகா சக்தி நகர்குடியிருப்பாளர்கள்.
ஆட்டம் காணும்கால்வாய் கட்டுமானம்
இந்த குழாய்கள் குடியிருப்புக்கு வெளியே, பிரதான ரோட்டில் உள்ள கால்வாயில் சென்று சேருகிறது.தற்போது இந்த கால்வாயின் கட்டுமானம், பெருச்சாளி தொல்லையால் சேதமடைந்து முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதை சரி செய்து முறையாக கட்டி முடிக்க வேண்டும். இந்த கட்டுமானம் சேதமாகியுள்ளதால், எங்கள் பகுதிக்குள் அமைந்துள்ள சுற்றுச் சுவரும் ஆட்டம் காணும் அபாயத்தில் உள்ளது.
சுற்றுப்பகுதியில் போதை ஆட்களின் நடமாட்டம் மற்றும் தொல்லை அதிகரித்த நிலையில் தான் இந்த பாதுகாப்பு ஏற்பாட்டை செய்தோம். தற்போது அது போன்ற பிரச்னை இல்லை. இருப்பினும் சுற்றுச் சுவர் என்பது ஒரு நிரந்தரமான பாதுகாப்புதான்.
வீதி விளக்குகளைப் பொறுத்த வரை தேவையான அளவில் உள்ளன. இதனால், எந்தப் பிரச்னையும் இல்லை.குப்பைகளைப் பொறுத்தவரை தினமும் வந்து துாய்மைப் பணியாளர்கள் பெற்றுச்செல்கின்றனர். இதனால், குப்பை பிரச்னை எப்போதும் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பூங்கா இருந்தும் சாலைதான் மைதானம்
ஸ்ரீ மகா சக்தி நகரில் இரு இடங்களில் உள்ள பூங்காக்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், வாக்கிங் டிராக் ஆகிய எந்த வசதியும் இல்லை. இதனால் சிறுவர்கள் ரோட்டில் தான் விளையாடும் நிலை உள்ளது.
இங்குள்ள மூன்று ரோடுகளும் நீண்ட காலம் முன்னர் போட்ட தார் ரோடுகள். உரிய வகையில் பராமரிக்கப்படாமல் இந்த ரோடுகள் அனைத்தும் மோசமான நிலையில் தான் உள்ளன. இவற்றை முழுமையாக புதுப்பிக்க வேண்டும்.
- குடியிருப்பாளர்கள், ஸ்ரீமகாசக்தி நகர்.