ADDED : ஆக 08, 2025 08:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில், கடைகளின் கழிவுநீர் ரோட்டில் செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டில் தினமும் டவுன்பஸ்கள், புறநகர் பஸ்கள் வந்து செல்கின்றன. ஏராளமான மக்கள் வருகின்றனர். அங்குள்ள ஓட்டல், கடைகளின் கழிவு நீர் ரோட்டில் வழிந்து செல்வதால், துர்நாற்றம் வீசி சுகாதார கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனால் நோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி சுகாதாரத்துறையினர் இதுகுறித்து ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்.