/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமத்தில் சுகாதாரம் இல்லை: விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
/
கிராமத்தில் சுகாதாரம் இல்லை: விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
கிராமத்தில் சுகாதாரம் இல்லை: விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
கிராமத்தில் சுகாதாரம் இல்லை: விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
ADDED : ஜன 19, 2024 11:35 PM
உடுமலை:உடுமலை, வடபூதிநத்தம் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே, ரோட்டோரத்தில் திறந்த வெளிக்கழிப்பிடமாக இருப்பதால், சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
உடுமலை, ஒன்றியத்துக்குட்பட்ட வடபூதிநத்தம் ஊராட்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. திறந்த வெளிக்கழிப்பிட நிலைக்கு தீர்வு காணவே, தனி நபர் இல்லக்கழிப்பிட திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.
இந்த ஊராட்சியில் இத்திட்டத்தில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். இதனால், இப்பகுதியில், பெரும்பான்மையான மக்கள் இன்னும், திறந்த வெளிக்கழிப்பிட நிலையையே தொடர்கின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்திலும், இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் விடுவதால், மக்கள், எந்த விழிப்புணர்வும் இல்லாமல், உள்ளனர்.
வடபூதிநத்தம் ரோட்டோரம் முழுவதும் வெளிக்கழிப்பிடமாக இருப்பது, அவ்வழியாக செல்வோரால், சகித்துக்கொள்ள முடியாமல் முகம் சுழிக்கின்றனர்.
ஊராட்சி நிர்வாகம், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், பிரச்னைக்கு தீர்வு காண்பதிலும், தீவிரம் காட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.