/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருப்பது ஒரேயொரு ஏ.டி.எம்., அதுவும் பழுது; மக்கள் கவலை
/
இருப்பது ஒரேயொரு ஏ.டி.எம்., அதுவும் பழுது; மக்கள் கவலை
இருப்பது ஒரேயொரு ஏ.டி.எம்., அதுவும் பழுது; மக்கள் கவலை
இருப்பது ஒரேயொரு ஏ.டி.எம்., அதுவும் பழுது; மக்கள் கவலை
ADDED : ஏப் 03, 2025 05:46 AM

பல்லடம்; சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன வதம்பச்சேரி கிராமத்தில், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஐ.ஓ.பி., வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கூறுகையில், ''சின்ன வதம்பச்சேரி, பெரிய வதம்பச்சேரி, காந்தி நகர் பகுதியில், கைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கைத்தறி நெசவு கூலி, நுாறு நாள் பணியாளர்களின் கூலி, ஊழியர்களின் சம்பளம் என, அனைத்துக்கும் இந்த வங்கி கிளையின் ஒரே ஒரு ஏ.டி.எம்., மையம் வாயிலாகவே பணம் எடுக்கின்றனர். ஏ.டி.எம்., இயந்திரம் பழுதாகி இரண்டு மாதமாகிறது.
வேறு ஏ.டி.எம்.,-ல் பணம் எடுக்க, 6 கி.மீ., துாரமுள்ள காமநாயக்கன்பாளையம் தான் செல்ல வேண்டும். உடனடியாக ஏ.டி.எம்., இயந்திரம் பழுது நீக்க வேண்டும்'' என்றனர்.