/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமைச்சர் காலில் விழுந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு
/
அமைச்சர் காலில் விழுந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு
அமைச்சர் காலில் விழுந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு
அமைச்சர் காலில் விழுந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு
ADDED : மார் 10, 2024 02:05 AM

திருப்பூர்:திருப்பூரில் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை குறித்த புகைப்பட கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்து உதவி கேட்டு கண்ணீர் மல்க கதறினார்.
அவரிடம் விபரம் கேட்ட அமைச்சர், அதிகாரிகளிடம் அவரது கோரிக்கையை கேட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசு உதவிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார்.
அவர், பாண்டியன் நகரை சேர்ந்த பரமசிவம், 54. மனைவி, இரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
தான் ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்றும், வறுமை காரணமாக குடும்பத்தை காப்பாற்ற வழியில்லாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உரிய நல உதவி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.