/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கதித்தமலை கோவிலில் 14ல் மலை மீது தேரோட்டம்
/
கதித்தமலை கோவிலில் 14ல் மலை மீது தேரோட்டம்
ADDED : பிப் 08, 2025 06:37 AM
திருப்பூர்; தமிழகத்தில், மலை மீது தேரோட்டம் நடைபெறும் சிறப்பு பெற்றது ஊத்துக்குளி, கதித்தமலை வெற்றிவேலாயுதசாமி கோவில். சிறிய மலை மீதுள்ள கோவிலில், 336 படிகள் இருக்கின்றன; சாலை வசதியும் உள்ளது.
கோவிலில் கடந்த 3ம் தேதி தைப்பூச தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 10ம் தேதி வரை, காலை மற்றும் மாலை இருவேளையும், உற்சவமூர்த்திகள் திருவீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 10ம் தேதி மாலை, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
வரும், 11ம் தேதி காலை, உற்சவமூர்த்திகள் அடிவாரத்தில் உள்ள தேரில் எழுந்தருள்கின்றனர்; அன்று காலையே வடம் பிடித்து தேரோட்டம் துவங்கும். மதிய இடைவேளைக்கு பிறகு, மீண்டும் மாலையில் வடம் பிடித்து தேர்கள் நிலைக்கு வந்துசேர்கின்றன.
வரும், 13ம் தேதி தெப்ப உற்சவமும், 14ம் தேதி காலை, 10:15 மணிக்கு, உற்சவமூர்த்திகள் மலை மீது உள்ள தேர்களில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து, வடம் பிடித்து, தேரோட்டம் துவங்கும்; மலை மீது வலம் வந்த பின் தேர்கள் நிலைசேர்கின்றன.
சிவன்மலை
சிவன்மலை ஸ்ரீசுப்ரமணியர் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. மலை மீது இருந்து, வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணியர், அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளி உள்ளார்.
வரும் 10ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 11ம் தேதி தேர் வடம் பிடித்து, தேரோட்டம் துவக்கி வைக்கப்படும்; 12 மற்றும் 13ம் தேதி மாலை 4:00 மணிக்கு, தேரோட்டம் நடைபெறும்; 13ம் தேதி தேர்கள் நிலையை வந்தடையும். வரும், 14, 15ம் தேதி காலை, மாலை சிறப்பு அபிேஷகம், 16ம் தேதி பரி வேட்டை, தெப்போற்சவம், 17ம் தேதி மகா தரிசனம் நடைபெறும். வரும் 18ம் தேதி தீர்த்தவாரி, 19ம் தேதி சிறப்பு அபிேஷகம், 20ம் தேதி சுவாமிகள் மீண்டும் மலை மீது எழுந்தருளியதும், மஞ்சள் நீர் விழா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெறும்.
ஸ்ரீசென்னியாண்டவர் கோவில்
கருமத்தம்பட்டி ஸ்ரீசென்னியாண்டவர் கோவிலில், வரும் 10ம் தேதி மாலை, 6:15 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடக்கிறது; இரவு, யானை வாகனத்தில் திருவீதியுலாவும், 11ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேரோட்டமும் நடக்க உள்ளது.
ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவில்
மங்கலம், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவிலில், வரும் 10ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணமும், மாலை, 6:00 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது. வரும் 11ம் தேதி காலை, சுவாமி ரதரோஹணமும், மாலை, 3:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. வரும், 12ம் தேதி பரிவேட்டையும், 13ம் தேதி மகாதரிசனமும், 14ம் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்க உள்ளது.