/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நேதாஜி மைதானத்தை மேம்படுத்துவதாக சொல்லிக்கிட்டே இருக்காங்க! ஆட்சிகள் மாறினாலும் அவலம் மாறவில்லை
/
நேதாஜி மைதானத்தை மேம்படுத்துவதாக சொல்லிக்கிட்டே இருக்காங்க! ஆட்சிகள் மாறினாலும் அவலம் மாறவில்லை
நேதாஜி மைதானத்தை மேம்படுத்துவதாக சொல்லிக்கிட்டே இருக்காங்க! ஆட்சிகள் மாறினாலும் அவலம் மாறவில்லை
நேதாஜி மைதானத்தை மேம்படுத்துவதாக சொல்லிக்கிட்டே இருக்காங்க! ஆட்சிகள் மாறினாலும் அவலம் மாறவில்லை
ADDED : ஆக 31, 2025 07:32 PM

உடுமலை; நேதாஜி மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விளையாட்டு ஆர்வலர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
உடுமலை நகரின் மையப்பகுதியில், 6.30 ஏக்கர் பரப்பளவில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான நேதாஜி மைதானம் அமைந்துள்ளது. அப்பள்ளி மாணவர்கள், மைதானத்தை பயன்படுத்துவதில்லை.
தற்போது இம்மைதானத்தை நடைபயிற்சி செல்வோர், கிரிக்கெட், ஹாக்கி, பாஸ்கட் பால், புட்பால், ஸ்கேட்டிங், தடகள பயிற்சி பெறுவோர் என அதிகளவிலான விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், ஹாக்கி பிரசித்தி பெற்ற விளையாட்டாக உள்ள நிலையில், பல வீரர்கள் இம்மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். நீண்ட காலமாக ஹாக்கி வீரர்களுக்கு தேவையான வசதிகளை அங்கு மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், உள்விளையாட்டு அரங்கம் அமைக்க, ஆய்வு நடந்தது. அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, மாநிலத்தில், 25 இடங்களில், மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ், நேதாஜி மைதானம் தேர்வு செய்யப்பட்டு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர் அரசுக்கு கருத்துரு அனுப்பினர்.
ரூ. 3 கோடி மதிப்பீட்டில், 400 மீ., தடகள ஓடுபாதை, திறந்தவெளி கூடைப்பந்து, வாலிபால், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடம் ஆகியவை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை நேதாஜி மைதானத்துக்கு முன்னுரிமை அளித்து திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இதுவரை எப்பணிகளும் மேற்கொள்ளவில்லை.
நீண்ட காலமாக மேம்பாட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விளையாட்டு ஆர்வலர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். கடந்த மாதம், முதல்வர் நிகழ்ச்சிக்காக மைதானத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.
இதனால், விளையாட்டு வீரர்களுக்கு சில இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. அதை தவிர்க்க, உடுமலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கருத்துரு அடிப்படையில் நேதாஜி மைதானத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

