/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிந்தனையும் ஆசையும் பெரிதாக வேண்டும்!
/
சிந்தனையும் ஆசையும் பெரிதாக வேண்டும்!
ADDED : செப் 20, 2024 10:47 PM

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை மற்றும் தொழிலில் வெற்றி பெற உடல், மன வலிமை பெற வேண்டும்; அதோடு நிறைய ஆசைபட வேண்டும். நேரம் என்பது பணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருப்பூரை பொறுத்தவரை ஆடை உற்பத்தியில் செலுத்துகின்றனர்.
அதிகபட்சம், 1,000, 2,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கின்றனர். இது, 20 ஆயிரம் கோடி என்ற நிலையை எட்ட வேண்டும். திருப்பூரில், அதிகளவு பில்லியனர்கள் இல்லை என்பது ஒரு குறையே. ஆடை உற்பத்தி சார்ந்த ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., உள்ளிட்ட அமைப்புகள் திருப்பூரில் நிறுவப்பட வேண்டும்.
அதிகளவு 'பிராண்டட்' ஆடை உரிமையாளர்கள் உருவாக வேண்டும். தனியார் விமான நிலையம் இருக்க வேண்டும். இங்குள்ள தொழில் துறையினர் தங்கள் சிந்தனையை இன்னும் பெரியளவிற்கு கொண்டு செல்ல வேண்டும்; பெரிதாக ஆசைப்பட வேண்டும்.
புதிதாக தொழில் துவங்க விரும்புவோர், எந்த விஷயத்தை செய்யக்கூடாது; எந்த விஷயத்தை அதிகமாக செய்ய வேண்டும்; எதைப்பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக கற்பனை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி என்பது, முதலில் மனதளவில் இருந்து வர வேண்டும். பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டால் பணம் வர காலதாமதமாகும்; வெற்றியை குறிக்கோளாக கொண்டு செயல்படும் போது, பணம் விரைவாக வரும். எதிர்காலம் குறித்து நிகழ்காலத்தில் பேச வேண்டும்.
தாங்கள் மேற்கொள்ள உள்ள தொழில் மீது முதலில் ஆசை கொள்ள வேண்டும். தங்களது தொழில் யோசனையை மிகத் தெளிவாக எழுதி, அதற்கு ஒரு வடிவம் கொடுக்கும் போது, தொழில் துவங்க தேவையான நிதியை பலரும் வழங்க முன்வருவர்.
தொழில் மீது ஆசையில்லாதவர்கள் வெற்றி பெற முடியாது. கடந்த, 10 ஆண்டுகளில் திருப்பூரில் உள்ள மக்களின் உடல் ஆரோக்கியம் வருந்தும் வகையில் தான் உள்ளது. கடந்தாண்டை விட நம் பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- சின்னக்கண்ணன்
சிவசங்கரன்
'டிஷ் நெட்' நிறுவனர்
அதிகபட்சம், 1,000, 2,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கின்றனர். இது, 20 ஆயிரம் கோடி என்ற நிலையை எட்ட வேண்டும்