/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எங்கெங்கும் இனி 'மூன்றாவது கண்': அவிநாசியில் பாதுகாப்பு சிறக்கிறது
/
எங்கெங்கும் இனி 'மூன்றாவது கண்': அவிநாசியில் பாதுகாப்பு சிறக்கிறது
எங்கெங்கும் இனி 'மூன்றாவது கண்': அவிநாசியில் பாதுகாப்பு சிறக்கிறது
எங்கெங்கும் இனி 'மூன்றாவது கண்': அவிநாசியில் பாதுகாப்பு சிறக்கிறது
ADDED : அக் 24, 2025 06:19 AM
அவிநாசி: தமிழக அரசின் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், அவிநாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
இதில் 25 லட்சம் ரூபாய் அரசு மானியமாகவும், 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு தொகையாகவும் பெறப்பட்டுள்ளது.
நகராட்சி கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
டி.எஸ்.பி., சிவகுமார் மற்றும் அவிநாசி போக்குவரத்து போலீஸ் முன்னாள் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் தொடர் முயற்சி காரணமாக,
நிதி பெறப்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், தாலுகா அலுவலகம், சிந்தாமணி பஸ் ஸ்டாப், சூளை, திருப்பூர் ரோட்டில் அணைப்புதுார் ஸ்டாப் வரை, கால்நடை மருத்துவமனை மற்றும் ஒவ்வொரு வார்டுகளில் நுழைவு பகுதி மற்றும் வெளி வரும் பகுதிகள் என 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.