/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு உயர்நிலைப் பள்ளியில் 'மூன்றாவது கண்' அமைப்பு
/
அரசு உயர்நிலைப் பள்ளியில் 'மூன்றாவது கண்' அமைப்பு
ADDED : மார் 28, 2025 03:19 AM

திருப்பூர்: திருமுருகன்பூண்டி அருகே ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம் மற்றும் ராக்கியாபாளையம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து, ஏழு இடங்களில், 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தியுள்ளன. அதன் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். ரோட்டரி தலைவர் டாக்டர் கார்த்திகேயன், பொருளாளர் சக்ரபாணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், துணை கவர்னர்கள் வேலுசாமி, டாக்டர் ஹரிவீர விஜயகாந்த், முன்னாள் தலைவர் வெங்கட் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அதன்பின், ரோட்டரி பள்ளியில் இன்டராக்ட் அமைப்பிலுள்ள பள்ளிக் குழந்தைகள், சிட்டுக்குருவிருக்கு கூண்டு அமைத்து, பல்வேறு இடங்களில் அவற்றுக்கு தண்ணீர் வைத்து, வாழ்விடங்களை ஏற்படுத்தி தரும் முயற்சியில் ஈடுபட்டனர். ராக்கியாபாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு, இலவச நீச்சல் மற்றும் கால்பந்து பயிற்சி வழங்கும் அறிவிப்பு, ரோட்டரி சார்பில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிகளை, இன்ட்ராக்ட் சங்க குழந்தைகள் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி பொருளாளர் சக்ரபாணி மேற்கொண்டார்.