/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : செப் 22, 2024 06:06 AM

அனுப்பர்பாளையம், : பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவில்களில், கடந்த மாதம், 28ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையொட்டி, மண்டல பூஜை தினசரி நடைபெற்று வந்தது. அதன் நிறைவு நாள் பூஜை நேற்று நடைபெற்றது. பூஜையையொட்டி, காலை விநாயகர் வழிபாடு, தொடர்ந்து, கல சங்கள் ஆலய வலம் வருதல், மூலவருக்கு திரவிய அபிஷேகம், சுவாமி மற்றும் அம்பிகைக்கு 108 சங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது.
மதியம் மஹா தீபாராதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மேல் ஆதிகேசவ பெருமாள் - ஸ்ரீதேவி பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.