/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொன்னர் சங்கர் கோவிலுக்கு திருக்குட நன்னீராட்டு விழா
/
பொன்னர் சங்கர் கோவிலுக்கு திருக்குட நன்னீராட்டு விழா
பொன்னர் சங்கர் கோவிலுக்கு திருக்குட நன்னீராட்டு விழா
பொன்னர் சங்கர் கோவிலுக்கு திருக்குட நன்னீராட்டு விழா
ADDED : ஜூன் 29, 2025 12:29 AM

அவிநாசி: அவிநாசி தாலுகா, கருவலுார் ஊராட்சி, எலச்சிபாளையம் அம்பேத்கர் நகரில் பொன்னர் சங்கர், மகாமுனி, கன்னிமார், கருப்பராய சாமி, தன்னாசியப்ப சாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவில் உள்ளது. இங்கு தமிழில் திருக்குட நன்னீராட்டு திருவிழா நடந்தது.
முன்னதாக கருவலுார் ஈஸ்வரன் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். வழிபாடுகள், திருப்பள்ளி எழுச்சி, திருமுறை விண்ணப்பம் ஆகியவற்றுக்குப் பின், மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. அம்பேத்கர் நகர் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.