/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமுறை பயிற்சி வகுப்பு துவக்கம்
/
திருமுறை பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : பிப் 08, 2026 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானத்தின் நுாற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பன்னிரு திருமுறை பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளது.
அதன்படி, திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளது. பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில், நேற்று சிறப்பு வழிபாடுடன், பன்னிரு திருமுறை பயிற்சி துவங்கியது.
இனிமேல், மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது திங்கட்கிழமைகளில், கோவில் வளாகத்தில் வகுப்பு நடக்குமென, அமைப்பாளர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

