/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் வணிக வரி கோட்டத்தில் 3 'சுவிதா கேந்திரா' சேவை மையம்
/
திருப்பூர் வணிக வரி கோட்டத்தில் 3 'சுவிதா கேந்திரா' சேவை மையம்
திருப்பூர் வணிக வரி கோட்டத்தில் 3 'சுவிதா கேந்திரா' சேவை மையம்
திருப்பூர் வணிக வரி கோட்டத்தில் 3 'சுவிதா கேந்திரா' சேவை மையம்
ADDED : பிப் 07, 2025 10:24 PM
திருப்பூர்; திருப்பூர் வணிக வரி கோட்டத்தில், மூன்று வணிக வரி அலுவலகங்களில் 'சுவிதா கேந்திரா' சேவை மையம் அமைய உள்ளது.
புதியதாக ஜி.எஸ்.டி., பதிவு செய்வோருக்கு உதவும் வகையில், தமிழ கம் முழுவதும் 41 வணிக வரித்துறை அலுவலகங்களில் 'சுவிதா கேந்திரா' சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. திருப்பூர் வணிக வரி கோட்டத்தில், மூன்று வணிக வரி அலுவலகங்களில் இந்த சேவை மையங்கள் செயல்பட உள்ளன.
அவ்வகையில், அனுப்பர்பாளையம், அவிநாசி, காந்தி நகர், பொங்கலுார், திருப்பூர் வடக்கு - 1 மற்றும் திருப்பூர் வடக்கு - 2, திருப்பூர் ரூரல் - 1, 2 ஆகிய சரகங்களுக்கான சேவை மையம், குமரன் ரோட்டிலுள்ள வணிகவரி மண்டலம் - 1 அலுவலகத்திலும், திருப்பூர் பஜார், திருப்பூர் சென்ட்ரல் - , 2, கொங்கு நகர், லட்சுமி நகர், திருப்பூர் தெற்கு சரகங்களுக்கு, திருப்பூர் - அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் அருகே உள்ள வணிக வரி மண்டலம் -2 அலுவலகத்திலும், தாராபுரம், காங்கயம், பல்லடம் 1 மற்றும் 2, உடுமலை வடக்கு, உடுமலை தெற்கு, வெள்ளகோவில் சரகங்களுக்கு, அவிநாசியில் ஏ.இ.பி.சி., பில்டிங்கில் இயங்கும் வணிக வரி மண்டலம் - 3 அலுவலகத்திலும் சுவிதா கேந்திரா சேவை மையம் உருவாக்கப்படுகிறது.
வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, சமர்ப்பிக்கும் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பின், ஆதார் சரிபார்ப்பு முழுமை பெறாது. இதுபோன்ற சூழல்களில், வணிக வரி அலுவலகத்தை அணுகி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வர்த்தகம் நடைபெறும் இடத்தை கள ஆய்வு செய்தும், ஆவணங்களை சரிபார்த்தபின், வணிக வரி அதிகாரிகளால் ஆதார் சரிபார்ப்பு பூர்த்தி செய்துகொடுக்கப்படும்.
'சுவிதா கேந்திரா' சேவை மையத்தில், சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, ஆதார் சரிபார்ப்பு பதிவு மட்டும் மேற்கொள்ளப்படும். இதனால், வர்த்தகர்களின் ஆதார் சரிபார்ப்பு விரைவாக முடிவடைந்து, உடனடியாக புதிதாகஜி.எஸ்.டி., பதிவு செய்ய செய்யமுடியும்.
சில வர்த்தகர்கள், வேறு நபர்களின் பான்கார்டு, ஆதார் விவரங்களை அளித்து, போலி ஜி.எஸ்.டி., பதிவு செய்து விடுவர். ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பின், ஆன்லைனில் ஆதார் சரிபார்ப்பு முழுமை பெறாது.
இதுபோன்ற சூழலில், நிறுவன உரிமையாளர் அல்லது பங்குதாரர்கள், சுவிதா கேந்திரா சேவை மையத்தை நேரடியாக அணுகி, பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும் என்பதால், போலிஜி.எஸ்.டி., பதிவுகள் இனி, தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.