/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாகாளியம்மன் கோவிலில் இன்று திருவிளக்கு பூஜை
/
மாகாளியம்மன் கோவிலில் இன்று திருவிளக்கு பூஜை
ADDED : மே 02, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், வாலிபாளையம் மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவில் இன்று மாலை திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது.
கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த, 29ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அம்மன் நாககாளி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று திருவிளக்கு பூஜையும் இன்று மாலை நடைபெறவுள்ளது.
பொங்கல் திருவிழாவில் வரும், 4ம் தேதி, பால்குட ஊர்வலம், 5ம் தேதி கும்பம் அழைத்தல் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெறுகிறது.