ADDED : ஜூலை 22, 2026 06:28 AM
தாராபுரம்:இலவச
வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி, தாராபுரத்தில்
நேற்று நடந்தது. மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
அருண்ராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர்
பேசியதாவது: நம் அமைச்சரவையில் யாரும் லஞ்சம் வாங்க மாட்டார்கள்.
ஊழல் செய்ய மாட்டார்கள். இந்த அரசு உங்களை சார்ந்து தான் இருக்கும்.
கடந்த தேர்தலில் சத்தியபாமாவை தேர்ந்தெடுத்தீர்கள். இப்போது அவர்
நம்முடன் இருக்கிறார்கள். எனவே இந்த தொகுதியும் நம்ம தொகுதிதான்.
டி.வி.கே., ஜெயிச்ச தொகுதி, மற்ற கட்சி ஜெயிச்ச தொகுதி என பாரபட்சம்
பார்க்க மாட்டோம். அனைத்து மக்களும் நம் மக்கள்தான். இவ்வாறு பேசினார்.
அதிகாரிகள் அவஸ்தை
நிகழ்ச்சிக்கு,
10:50 மணிக்கு வந்த கலெக்டர் மணிஷ் நாரணவரே, அமைச்சர் வர
தாமதமானதால், வெளியே சென்று விட்டு, 11:45 மணிக்கு வந்தார். மீண்டும்
அரை மணி நேரம் காத்திருந்த பிறகே அமைச்சர் வந்தார். மேடையை கட்சியினர்
ஆக்கிரமித்ததால், உட்கார இடமின்றி மேடை ஓரமாக தாசில்தார்
ராமலிங்கம் நிற்க நேரிட்டது.
