தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உங்கள் தொகுதி தேர்தல் பார்வையாளர் இவர் தான்!

 உங்கள் தொகுதி தேர்தல் பார்வையாளர் இவர் தான்!

 உங்கள் தொகுதி தேர்தல் பார்வையாளர் இவர் தான்!


ADDED : மார் 20, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 05:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ''திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்து, தங்களது கருத்து மற்றும் குறைகளை தெரிவிக்கலாம்'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில், நான்கு பொது பார்வையாளர், ஐ.ஆர்.எஸ். அந்தஸ்தில் 5 செலவின பார்வையாளர் மற்றும் ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஒரு காவல் பார்வையாளர் என, 10 பேர் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் சட்டசபை தொகுதி, செலவின பார்வையாளர்களை தவிர்த்து, மற்ற அனைத்து தேர்தல் பார்வையாளர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். தேர்தல் பார்வையாளர்களை அந்தந்த பகுதிகளிலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில், காலை, 11:00 மணி முதல், 12:00 மணி வரை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்.

தொகுதி / பொது பார்வையாளர் / செலவின பார்வையாளர்

* தாராபுரம் (தனி), காங்கயம் - சுதா வர்மா - 99446 81624, மொசுகண்டி கங்காதர் - 75500 84197

* அவிநாசி (தனி), திருப்பூர் வடக்கு - சரிஹா மோகன் - 96775 23567, சச்சின் குமார் சிங் - 84384 88106

* திருப்பூர் தெற்கு, பல்லடம் - தர்மேந்திர சிங் - 73388 63629, இன்னும் நியமிக்கப்படவில்லை

* உடுமலை, மடத்துக்குளம் - தினேஷ் ஸ்ரீவத்ஸவா - 98405 17174, சத்யநாராயண் தக்கார் - 95663 37845

காவல் பார்வையாளர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும், காவல் பார்வையாளராக, ராகுல் ெஹக்டே (மொபைல் எண். 88077 02867)நியமிக்கப்பட்டுள்ளார். அவரை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை, அறை எண். 4ல் , முற்பகல், 11:00 மணி முதல், 12:00 மணி வரை சந்திக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us