/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் முள்செடிகள் விபத்துகள் அதிகரிப்பு
/
ரோட்டில் முள்செடிகள் விபத்துகள் அதிகரிப்பு
ADDED : ஜூலை 01, 2025 10:25 PM

உடுமலை; கணக்கம்பாளையம் ஊராட்சியில் எஸ்.வி., புரம் பகுதியிலிருந்து, ஜீவாநகர் செல்லும் ரோட்டில் நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த ரோட்டின் இருபுறமும் முள்செடிகள் வளர்ந்து புதர்காடாக மாறியுள்ளது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மீது கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இவ்வாறு அப்பகுதியில் பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
அவ்வழி தடத்தை பயன்படுத்தவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். உயிரிழப்பு ஏற்படும் முன்பு, ரோட்டின் இருபுறத்தையும் சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.