/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சதம் அடித்தனர் பாராட்டு பெற்றனர்
/
சதம் அடித்தனர் பாராட்டு பெற்றனர்
ADDED : நவ 26, 2025 06:13 AM
அவிநாசி, திருப்பூர், பல்லடம், காங்கயம் சட்டசபை தொகுதிகளில் ஆய்வு முடித்த இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, தாராபுரத்துக்கு சென்றார். தாலுகா அலுவலகத்தில், வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆய்வு செய்தார்.
தாராபுரம் சட்டசபை தொகுதியில், நான்கு பி.எல்.ஓ.,க்கள், சிறப்பாக களப்பணி மேற்கொண்டு, தங்கள் பாகத்துக்கு உட்பட்ட நுாறு சதவீத வாக்காளருக்கும் படிவம் வழங்கி, பூர்த்தி செய்து பெற்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவ்வகையில், தனம், யுவராணி, சுதா, மாரியம்மாள் ஆகிய ஐந்து பி.எல்.ஓ.,க்களுக்கும், தேர்தல் ஆணைய இயக்குனர், விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

