/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்ணுக்கு மிரட்டல்; 4 பேர் கைது
/
பெண்ணுக்கு மிரட்டல்; 4 பேர் கைது
ADDED : செப் 07, 2025 10:40 PM
திருப்பூர்; திருப்பூரில் கைக்குழந்தையுடன் அழைத்துச்சென்று பெண்ணை மிரட்டிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே காட்டன் மில் ரோட்டை சேர்ந்தவர், 29 வயது பெண்; கடந்த 5ம் தேதி இரவு, பண விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, பெண்ணிடம், நான்கு மாத கைக்குழந்தையுடன் தொட்டிய மண்ணரை பகுதிக்கு அழைத்து சென்று தாக்கி, பணம் கேட்டு மிரட்டினர். இதுதொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பெண் கடத்தி செல்லப்பட்டதாக புகார் சென்றது.
பெண்ணை உடனடியாக மீட்ட போலீசார், நான்கு பேரிடம் விசாரித்தனர். தொட்டிய மண்ணரையை சேர்ந்த வினோத்குமார், 30 என்பவரின் மொபைல் போனில் இருந்து ஆன்லைன் செயலி மூலம், 50 ஆயிரம் ரூபாயை பெண் பெற்றார். மாத தவணை வரும் போது, கடன் பெற்றது குறித்து வினோத்குமாருக்கு தெரிய வந்தது. இந்த பணத்தை கேட்டபோது, அந்த பெண் பணத்தை தராமல் காலம் கடத்தினார். வினோத்குமார் மற்றும் இவரது நண்பர்கள் சிவக்குமார், 30, கார்த்திக், 35, முத்துக்குமார், 42 என, நான்கு பேரும் இதுதொடர்பாக பேச பெண்ணை அழைத்து சென்று தாக்கி, மிரட்டியது தெரிந்தது. பெண்ணை தாக்கி, மிரட்டியது தொடர்பாக, நான்கு பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.