ADDED : ஜூலை 01, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; மருத்துவர் தினம், தபால் ஊழியர்கள் தினம் மற்றும் ஆடிட்டர்கள் தினம் ஆகிய முப்பெரும் தினம் பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் சார்பில், கொண்டாடப்பட்டன. ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
வாழும் கலை மைய கிளை தலைவர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கதிரேசன் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, அரசு தனியார் மருத்துவர்களை நேரில் சந்தித்து, மருத்துவர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இதேபோல், தபால் துறை அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் ஆடிட்டர்கள் ஆகியோரை சந்தித்து, தபால் ஊழியர்கள் தினம், ஆடிட்டர்கள் தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு, அனைவரும் கவுரவிக்கப்பட்டனர்.