/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனப்பகுதியில் 'ட்ரோன்' மூன்று பேருக்கு அபராதம்
/
வனப்பகுதியில் 'ட்ரோன்' மூன்று பேருக்கு அபராதம்
ADDED : பிப் 17, 2024 01:04 AM

ஊட்டி:ஊட்டியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், 'ட்ரோன்' இயக்கிய மூவருக்கு வனத்துறை அபராதம் விதித்தது.
நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்குவதற்கு தடை உள்ளது. இந்த தடையை மீறி, பலர் ட்ரோன் இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஊட்டி தலைகுந்தா அருகே, 'எர்த்தன் டேம்' வனப்பகுதியில், சென்னையை சேர்ந்த, 'யூ டியூபர்' தாகூர் சுரேஷ்பாபு,27 மற்றும் ஊட்டியை சேர்ந்த பைசல் ரகுமான்,27, முகமது உவேஸ்,26, ஆகியோர் வனப்பகுதிக்குள் ட்ரோன் இயக்கியுள்ளனர்.
தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனை அறிந்த வனத்துறையினர் அவர்கள் மூவரையும் ஊட்டி வனத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்தனர். மூவருக்கும் மொத்தம், 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
நீலகிரி டி.எப்.ஓ., கவுதம் கூறுகையில்,''நீலகிரியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ட்ரோன் இயக்கக்கூடாது. அனுமதி பெற்று இயக்கினால் கூட, வனத்துறையினருடன் செல்லவேண்டும். இந்நிலையில், அனுமதி இல்லாமல் ட்ரோன் இயக்கிய மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது,'' என்றார்.