/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூன்று தலைமுறைகளாக சூரன் வாகனம் தயாரிப்பு
/
மூன்று தலைமுறைகளாக சூரன் வாகனம் தயாரிப்பு
ADDED : அக் 28, 2025 12:58 AM

அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோடு, மஹா நகரில் ஸ்ரீ தேவி வாகன கலைக்கூடம் நடத்தி வருபவர் அங்குராஜ். இவர், இவரின் தாத்தா நடராஜன், தந்தை சுகுமாரன், என மூன்று தலைமுறைகளாக, கோவில்களுக்கு வாகனம் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சப்பரத்தில் வைக்கப்படும் வாகனங்களை செய்து வரும் ஒரே கலைக்கூடம் இவருடையது மட்டுமே. அங்குராஜ் கூறுகையில், ''ஊத்துக்குளி அருகே சர்க்கார் பெரியபாளையம் பழநியாண்டவர் கோவிலுக்கு கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கடந்த மூன்று மாத காலமாக கஜமுகாசூரன், சிங்கமுகாசுரன், பானுகோபன், சூரபத்மன் ஆகிய வாகனங்களை செய்து கொடுத்துள்ளோம். இதுவரை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னி ஆண்டவர் கோவில், குமரன் குன்று, திருமுருகன்பூண்டி, கதித்தமலை, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் என பல கோவில்களுக்கு பல்வேறு வாகனங்களை செய்து கொடுத்துள்ளோம்,'' என்றார்.

