/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமியை சீண்டி காலில் சூடு தம்பதி உட்பட மூவர் சிக்கினர்
/
சிறுமியை சீண்டி காலில் சூடு தம்பதி உட்பட மூவர் சிக்கினர்
சிறுமியை சீண்டி காலில் சூடு தம்பதி உட்பட மூவர் சிக்கினர்
சிறுமியை சீண்டி காலில் சூடு தம்பதி உட்பட மூவர் சிக்கினர்
ADDED : ஆக 18, 2025 01:51 AM
காங்கேயம்:தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டலை தந்தையிடம் சொல்வேன் எனக்கூறிய சிறுமிக்கு, சூடு வைத்தது தொடர்பாக தம்பதி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, 8 வயது சிறுமி அருகில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் வீட்டருகே வசித்த டிரைவர் தியாகு, 22, என்பவர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து, தியாகு மனைவி ரஞ்சிதா, 23, தாய் ஜெயந்தி, 45, ஆகியோருக்கும் தெரிய வந்தது. சிறுமியிடம் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என, மிரட்டியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன், பாலியல் சீண்டல் குறித்து தந்தையிடம் சொல்ல உள்ளதாக சிறுமி அவர்களிடம் கூறியுள்ளார். உடனே, சிறுமிக்கு கத்தியை காய்ச்சி கை மற்றும் கால்களில் சூடு வைத்து சித்ரவதை செய்தனர். இது சிறுமி குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. காங்கேயம் போலீசில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, தியாகு, ரஞ்சிதா, ஜெயந்தி ஆகியோரை 'போக்சோ'வில் நேற்று போலீசார் கைது செய்த னர்.