/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுகள் கூடாரமாக துத்தாரிபாளையம்
/
கழிவுகள் கூடாரமாக துத்தாரிபாளையம்
ADDED : ஜன 01, 2025 05:47 AM
பல்லடம் : பல்லடம் அடுத்த மாதப்பூர் ஊராட்சி துத்தாரிபாளையம் கிராமத்தில், விவசாய நிலங்களை ஒட்டியுள்ள தனியார் நிலத்தில், பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் குப்பைகள் குவியலாக போடப்பட்டுள்ளன.
அப்பகுதியினர் கூறியதாவது:
சுற்றிலும் விவசாய நிலங்கள் இருக்க, நடுவே, திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், பயன்படுத்தப்பட்ட பால் பாக்கெட்கள், குளிர்பான பேக்குகள், திண்பண்ட பாக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் கழிவுகள், குப்பைகள் ஆகியவை குவியலாக போடப்பட்டுள்ளன. கம்பிவேலி அமைத்து அதற்குள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. விளை நிலங்களுக்கு அருகே, இதுபோன்று கழிவுகள் குவித்து வைத்திருப்பது, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இவை, வெளி மாநிலங்களில் இருந்து வந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இவை எதற்காக இங்கு கொட்டப்பட்டுள்ளன? எங்கிருந்து, யார் எடுத்து வந்தார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து மாதப்பூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.