/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் டைடல் பார்க் திறப்பு
/
திருப்பூரில் டைடல் பார்க் திறப்பு
ADDED : ஆக 12, 2025 03:50 AM

திருப்பூர்: திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில், 'டைடல் பார்க் நியோ'வை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மாவட்டத்தின், திருமுருகன்பூண்டியில் அமைக்கப்பட்டுள்ள 'டைடல் பார்க் நியோ'வை காணொளி வாயிலாக திறந்துவைத்தார்.
டைடல் பார்க்கில், தொழில் துறை அமைச்சர் ராஜா குத்துவிளக்கேற்றினார். திருப்பூர் தெற்கு தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் மற்றும் டைடல் பார்க் அதிகாரிகள், பொறியாளர்கள் பங்கேற்றனர்.
'மொத்தம், 39.44 கோடி ரூபாய் செலவில், 65,379 சதுரடி பரப்பளவில் தரைத்தளம் உட்பட எட்டு அடுக்கு கட்டடமாக 'டைடல் பார்க் நியோ' கட்டப்பட்டுள்ளது.
'ஏழு நிறுவனங்கள் செயல்படும் வகையில் வடிவமைப்பு உள்ளது. 600 பேர் வரை அமர்ந்து பணிபுரிவதற்குரிய உட்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

