sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாய்ந்த மின் கம்பம் டிரான்ஸ்பார்மர்  'ஆட்டம்'

/

சாய்ந்த மின் கம்பம் டிரான்ஸ்பார்மர்  'ஆட்டம்'

சாய்ந்த மின் கம்பம் டிரான்ஸ்பார்மர்  'ஆட்டம்'

சாய்ந்த மின் கம்பம் டிரான்ஸ்பார்மர்  'ஆட்டம்'


ADDED : மார் 18, 2025 04:00 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபாய மின் கம்பம்

திருப்பூர், வீரபாண்டி, ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் கம்பத்தை மாற்ற வேண்டும்.

- செல்வராஜ், வீரபாண்டி. (படம் உண்டு)

திருப்பூர், 19வது வார்டு, முருகானந்தபுரம் இரண்டாவது வீதியில் விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.

- ரஞ்சித், முருகானந்தபுரம். (படம் உண்டு)

மின் போர்டு சேதம்

பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, அவரப்பாளையம், கருப்பராயன் கோவில் வீதியில், மின்கம்பத்தில் உள்ள போர்டு சேதமாகி, உடைந்துள்ளது. விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும்.

- செல்வன், அவரப்பாளையம். (படம் உண்டு)

காத்திருக்கும் ஆபத்து

திருப்பூர் வாலிபாளையம், யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில், திருமண மண்டபம் அருகே டிரான்ஸ்பார்மர் கான்கிரீட் பூச்சு விழுந்து, ஆடும் நிலையில் உள்ளது; மாற்ற வேண்டும்.

- வின்சென்ட்ராஜ், வாலிபாளையம். (படம் உண்டு)

தடுப்புச்சுவர் வீண்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ரயில்வே பாலம் அருகே மையத்தடுப்புச்சுவர் வீணாகி வருகிறது. அங்கிருந்து எடுத்து சென்று வேறு இடத்திலாவது பயன்படுத்த வேண்டும்.

- சத்ருகன், அணைக்காடு. (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகிறது. புகார் தெரிவித்தும், குழாய் உடைப்பை குடிநீர் வடிகால்வாரியம் கண்டுகொள்வதில்லை.

- விஜி, பூண்டி. (படம் உண்டு)

ஒளிராத விளக்கு

திருப்பூர், ஜி.என்., கார்டன் கடைசி வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை. கும்மிருட்டாக உள்ளது. எரியாத விளக்கை மாற்றி, புதுவிளக்கு பொருத்த வேண்டும்.

- ரவி, ஜி.என்., கார்டன். (படம் உண்டு)

கடும் துர்நாற்றம்

திருமுருகன்பூண்டி, சேலம் - கொச்சி பைபாஸ் சாலை பாலத்தின் கீழ் கழிவுநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. அதில் குப்பை கொட்டப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- சக்திவேல், அவிநாசி. (படம் உண்டு)

சாலை சேதம்

திருப்பூர், பூலுவப்பட்டி - அங்கேரிபாளையம் ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலையே சேதமாகிவிட்டது. ஒரு மாதமாகியும் சரி செய்யவே இல்லை.

- மனோகரன், பூலுவப்பட்டி. (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், டீச்சர்ஸ் காலனி மூன்றாவது வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- சபரீஸ், டீச்சர்ஸ் காலனி. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us