ADDED : ஜன 16, 2025 05:54 AM

உடுமலை: பொங்கல் விடுமுறை காரணமாக, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலா பயணியர் திரண்டனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல் பஞ்சலிங்க அருவி, மலையடிவாரத்தில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை என சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, திருமூர்த்திமலைக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் வந்திருந்தனர்.
மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில், நீர் ஆர்ப்பரித்து கொட்டிய நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலிலும், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா வாகனங்கள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் வந்திருந்ததால், ரோட்டில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.