/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணை பலப்படுத்தும் பணி தீவிரம்
/
திருமூர்த்தி அணை பலப்படுத்தும் பணி தீவிரம்
ADDED : நவ 06, 2024 10:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை ; உடுமலை திருமூர்த்தி அணையில், கரை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
பி.ஏ.பி., திட்ட அணைகளில் ஒன்றான, திருமூர்த்தி அணையிலிருந்து, இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, பருவ மழைகள் பெய்துள்ள நிலையில், அணை கரைகள் பலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
அணையில் நீர் தேங்கும் பரப்பு மற்றும் வெளிப்புற கரை பகுதிகளில், வளர்ந்துள்ள முட்செடிகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது.
அதே போல், அணை ரோடு மற்றும் கரைப்பகுதியிலுள்ள செடிகள் மற்றும் கரையான் புற்றுக்கள் அகற்றப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டு வருகிறது.