/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் - கோவை ரயில் இயக்கம் மாற்றம்
/
திருப்பூர் - கோவை ரயில் இயக்கம் மாற்றம்
ADDED : ஜூலை 10, 2025 11:24 PM
திருப்பூர்; திருப்பூரை கடந்து கோவை வழியாக செல்லும், கோவையில் இருந்து திருப்பூர் வரும் ரயில்கள் இயக்கம் இன்றும், நாளையும் மாற்றப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், இருகூர் - பீளமேடு இடையே தண்டவாள பராமரிப்பு, பாலம் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், இன்றும், நாளையும் (12 ம் தேதி) திருவனந்தபுரம் - மைசூரு (எண்:16316) எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - கட்ரா வைஷ்ணவி தேவி கோவில் (எண்:16317), கன்னியாகுமரி - திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் (எண்:22503) ஆகிய ரயில்கள் போத்தனுார் - இருகூர் வழித்தடத்தில் இயங்கும்; கோவை ஜங்ஷனுக்கு ரயில் செல்லாது.
காரைக்கால் - எர்ணாகுளம் டீ கார்டன் எக்ஸ்பிரஸ் (எண்:16187), எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் (எண்:22669), சென்னை - மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் (எண்:12671), இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் இயங்கும்; கோவை வடக்கு மற்றும் கோவைக்கு ஜங்ஷனுக்கு ரயில் செல்லாது என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.