/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'திருப்பூர் - தாராபுரம் கூடுதல் பஸ் தேவை'
/
'திருப்பூர் - தாராபுரம் கூடுதல் பஸ் தேவை'
ADDED : ஜூன் 20, 2025 02:06 AM
திருப்பூர் : திருப்பூரில் இருந்து, அதிகாலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரை, பழநிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம், ஊட்டி, சத்தி, கோபி மற்றும் அந்தியூரில் இருந்து திருப்பூர் வழியாக, கொடுவாய், குண்டடம் நால்ரோடு, தாராபுரம் பை-பாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் நின்று, பழநியை அடைகின்றன. அவிநாசிபாளையம், வஞ்சிபாளையம், தாராபுரம் நகர் உள்ளிட்ட இடங்களில் இவை நிற்பதில்லை. திருப்பூரில் இருந்து தாராபுரத்துக்கு ஓரிரு தனியார் பஸ்களே உள்ளன. இவை பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.
பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
தனியார் பஸ் ஒன்று, பல்லடம் வழியாக தாராபுரத்தையும், மற்றொன்று குண்டடம் வழியாக மாற்றுப்பாதையில், தாராபுரத்துக்கும் சென்று வருகின்றன. இரண்டு பஸ் மட்டுமே நேர்வழியில் செல்கிறது. திருப்பூரில் இருந்து தாராபுரத்துக்கென கூடுதல் பஸ்கள் இல்லை. பழநி பஸ்சில் தாராபுரம் செல்வதற்கு, நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை. நின்றபடி செல்ல வேண்டியுள்ளது.
தாராபுரத்தை கடந்து செல்லும் பஸ்கள், தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்குள் சில நேரங்களில் மட்டுமே செல்கின்றன. கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.