sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு... 4 வழிச்சாலையாகிறது; முதல் கட்டப்பணி துவங்குகிறது

/

திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு... 4 வழிச்சாலையாகிறது; முதல் கட்டப்பணி துவங்குகிறது

திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு... 4 வழிச்சாலையாகிறது; முதல் கட்டப்பணி துவங்குகிறது

திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு... 4 வழிச்சாலையாகிறது; முதல் கட்டப்பணி துவங்குகிறது

1


ADDED : டிச 19, 2025 05:54 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:54 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து பெட்டிக்கடை வரை, 5.5 கி.மீ., நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது.

போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் சாலைகளில் நெரிசலை தவிர்க்கவும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், சாலைகள் தரம் உயர்த்தப்படுகிறது.

திருப்பூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு செல்ல, ஊத்துக்குளி ரோடு, பிரதானமானது.

திருப்பூரில் இருந்து 17 கி.மீ., துாரத்தில் ஊத்துக்குளி உள்ளது. நகருக்குள், நான்கு கி.மீ., சாலை ஆக்கிரமிப்புகளால், இரண்டு வழி சாலையாக மட்டுமே உள்ளது. ரோட்டோர கடைகள், தள்ளுவண்டி ஆக்கிரமிப்பு எக்கச்சக்கம். பாரப்பாளையம் பஸ் ஸ்டாப் துவங்கி, குளத்துப்பாளையம் பகுதி வரை மற்றும் ரயில்வே மேம்பாலம் உள்ள பகுதி என மூன்று கி.மீ. மட்டுமே நான்கு வழிச் சாலையாக தற்போது உள்ளது.திருப்பூர் - ஊத்துக்குளி சாலையை, 2027 மார்ச்சுக்குள், நான்கு வழிச்சாலையாக மாற்ற, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக இப்பணி நடக்கவுள்ளது. முதல் கட்டமாக, குளத்துப்பாளையம் பஸ் ஸ்டாப் சோதனைச்சாவடி அருகே துவங்கி, பெட்டிக்கடை பஸ் ஸ்டாப் வரை, 5.5 கி.மீ., சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான அளவீடு பணி நடந்தது. முதல்கட்ட பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருத்துருவுக்கு, 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

---

விரிவுபடுத்தப்படவுள்ள திருப்பூர் - ஊத்துக்குளி சாலை.

ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம் ஊத்துக்குளி சாலையில் குளத்துப்பாளையம் ஸ்டாப் சோதனைச்சாவடி அருகே துவங்கி, பெட்டிக்கடை ஸ்டாப் வரை ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''குளத்துப்பாளையம் - பெட்டிக்கடை இடையே, பத்து - 12 மீட்டராக உள்ள சாலை, 7.5 - 7.5 என இருபுறமும் சேர்த்து, 15 மீ. கொண்ட சாலையாக மாற்றப்படும். ஊத்துக்குளி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிரந்தர ஆக்கிரமிப்புகளும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 400 பேருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டியுள்ளது. தற்போது, நான்கு வழிச்சாலை பணி துவங்குமிடத்தில், 107 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, இரண்டு முறை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது'' என்றனர்.








      Dinamalar
      Follow us