/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க., வினர் மறியல் திருப்பூரில் மாஜி அமைச்சர் உட்பட கட்சியினர் கைது
/
ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க., வினர் மறியல் திருப்பூரில் மாஜி அமைச்சர் உட்பட கட்சியினர் கைது
ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க., வினர் மறியல் திருப்பூரில் மாஜி அமைச்சர் உட்பட கட்சியினர் கைது
ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க., வினர் மறியல் திருப்பூரில் மாஜி அமைச்சர் உட்பட கட்சியினர் கைது
ADDED : ஜூலை 31, 2011 02:49 AM
திருப்பூர் : ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில், சாலை மறியலில் ஈடுபட்ட மாஜி அமைச்சர், மேயர் உள்ளிட்ட தி.மு.க., வினரை போலீசார் கைது செய்தனர். திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட, மேயர் செல்வராஜ், மாநகர துணை செயலாளர் நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், மாநகர தி.மு.க., அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த டி.எஸ்.பி., ராஜாராம் மற்றும் போலீசார் பஸ் ஸ்டாண்ட்டுக்கு நூறடி முன், ரோட்டில் பேரிகார்டுகளை வைத்து கூட்டத்தை தடுத்தனர். போலீசார் தடுத்து நிறுத்திய இடத்தில், மறியலில் ஈடுபட்ட தி.மு.க., வினர் 280 பேரை கைது செய்தனர். அங்கிருந்த இரண்டு மினி பஸ்களில் அவர்கள் ஏற்றப்பட்டனர். இரண்டு பஸ்களிலும் இடமில்லாத நிலையில் வேன் ஒன்றில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன், மேயர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஏறி சென்றனர். மறியலில் ஈடுபட்டவர்களை, மாலையில் விடுவித்தனர்.'நழுவிய' தொண்டர்கள்: கட்சி அலுவலகத்திலிருந்து மறியல் செய்ய கோஷமிட்டபடி ஆவேசமாக கிளம்பிய தி.மு.க., வினர், வழியில் ஒவ்வொருவராக கலைந்து பிரிந்து சென்றனர்.
மறியலின் போதும், போலீசார் கைது செய்தபோதும் இன்னும் பலர் அங்கிருந்து நழுவி சென்றனர்.பல்லடத்தில் 30 பேர் கைது: ஸ்டாலின் கைதை கண்டித்து, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், நகராட்சி தலைவர் ராமமூர்த்தி, நகர செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட 30 பேரை, பல்லடம் போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.கொடுவாயில் 50 பேர் கைது: பொங்கலூர் முன்னாள் எம்.எல்.ஏ., மணி தலைமையில், கொடுவாயில் சாலைமறியலுக்கு முயன்ற தி.மு.க., வினர் 50 பேர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.