/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய கோரிக்கையின் போது சிறப்பு அறிவிப்பு திருப்பூர் பனியன் தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
/
மானிய கோரிக்கையின் போது சிறப்பு அறிவிப்பு திருப்பூர் பனியன் தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
மானிய கோரிக்கையின் போது சிறப்பு அறிவிப்பு திருப்பூர் பனியன் தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
மானிய கோரிக்கையின் போது சிறப்பு அறிவிப்பு திருப்பூர் பனியன் தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : மார் 15, 2025 11:46 PM
திருப்பூர்:தமிழக பட்ஜெட்டில், முதலீட்டு மானியம் உள்ளிட்ட, பிரத்யேக அறிவிப்பு இல்லாவிட்டாலும், மானிய கோரிக்கையின் போது சிறப்பு அறிவிப்புகளை வெளியிட முதல்வர் முன்வர வேண்டும் என, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் தொழில்துறையில், குறு, சிறு தொழில்கள், கடை நடத்துவோர், மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்; தீவிர போராட்டத்துக்கு பிறகு சிறிய நிவாரணம் கிடைத்துள்ளது.
சொத்துவரி உயர்வுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. வரி உயர்வை குறைக்க, அரசுக்கு கடிதம் அனுப்பும் சடங்கு நடந்து முடிந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, காங்கயம், தாராபுரம் பகுதியில் நிலவும் தெருநாய் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது; ஆடுகளை தாக்கி கொல்வதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அமராவதி சர்க்கரை ஆலை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும்.
வெள்ளகோவிலை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா உருவாக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பனியன் தொழில்துறையினர், திருப்பூர் பனியன் தொழிலுக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். குறு, சிறு தொழில்களுக்கு, கடந்த சில ஆண்டுகளாக, முதலீட்டு மானிய உதவி கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, 10 ஆண்டுகளாக புதிய தொழில் முதலீடு நடக்கவில்லை. அதிகபட்ச வரிவிதிப்பால், இயந்திரம் இறக்குமதியும் தடைபட்டுள்ளது. தமிழக அரசு, 25 சதவீதம் அளவுக்கு, முதலீடு மற்றும் வட்டி மானியம் வழங்க வேண்டும்.
பனியன் தொழிலில், தையல் மெஷின் வாங்க மட்டுமே மானிய உதவி கிடைக்கிறது; நிட்டிங், சாய ஆலைகள், பிரின்டிங், எம்ப்ராய்டரி என, அனைத்து 'ஜாப் ஒர்க்' பிரிவுக்கும், வட்டி மானிய சலுகை வழங்க வேண்டும்.
மினி டெக்ஸ்டைல் பார்க் திட்டம் சரிவர செயல்படுத்தினால், மாநிலத்தில் பின்தங்கிய பகுதிகளுக்கு, பனியன் தொழிலை கொண்டு செல்ல முடியும். திட்டத்தில் உள்ள கடுமையான விதிமுறைகள், தொழிலை விரிவாக்கம் செய்ய தடையாக இருக்கிறது.
விதிமுறைகளை திருத்தம் செய்ய வேண்டும். திருப்பூரில் ஏற்றுமதி மையம் அமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது; அதற்கு பிறகு, திருப்பூரின் வர்த்தக கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு, 20 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மின் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கான வரியை குறைத்து, வரி சலுகை வழங்க வேண்டும். தொழிலாளர் விடுதி அமைக்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் தொழில்துறையினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் தொழில் பயிற்சி நிலையம், பல்லடத்தில், 'செமி கன்டக்டர்' தொழிற்சாலை போன்ற அறிவிப்பு மட்டும் வந்துள்ள. ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கான அறிவிப்புகளில் மட்டும் திருப்பூர் பயன்பெற வேண்டியுள்ளது. திருப்பூர் தொழில்துறைக்கு பிரத்யேக அறிவிப்பு இல்லாதது ஒருவித ஏமாற்றத்தையே உருவாக்கியுள்ளது.
மானிய கோரிக்கைஅறிவிப்பு
பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், 'தமிழக பட்ஜெட்டில், திருப்பூரின் கோரிக்கைகள் பிரதிபலிக்கவில்லை. நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டும் பனியன் தொழில் மேம்பாட்டுக்கான அறிவிப்பு இல்லாதது வருத்தம். இருப்பினும், தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழக முதல்வரை சந்தித்து முறையிட உத்தேசித்துள்ளோம்.
முன்னதாக, ஒவ்வொரு அமைப்பும், கோரிக்கையை வலியுறுத்தி, கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், 110 விதிகளின் கீழ் அல்லது மானிய கோரிக்கையின் போது, திருப்பூருக்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வாய்ப்புள்ளது,' என்றனர்.
ஆராய்ச்சி என்பது
திட்டமாக வேண்டும்
கோவையில் இரண்டு கட்டமாக செயல்படுத்தும் மெட்ரோ ரயில் திட்டத்தை, திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பது, தொழில்துறையினரின் நீண்டநாள் கோரிக்கை. தமிழக பட்ஜெட்டில், கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் (185 கி.மீ.,) வரை, மித அதிவேக ரயில்வே அமைக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஆராயப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், இத்தகைய அறிவிப்புக்கு உயிர்கொடுக்க வேண்டும்; முதல்கட்டமாக, கோவையில் இருந்து, திருப்பூர் வரை, மெட்ரோ ரயிலை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.