நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : ஊழல் முறைகேடுகளை கண்டித்து இந்திய கம்யூ., மற்றும் மா.
கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ரவி, ஒன்றிய செயலாளர் சண்முகம், துணை செயலாளர் ஈசாக், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல் முறைகேடுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த இந்திய கம்யூ., மற்றும் மா. கம்யூ., கட்சி சார்ந்தோர் பங்கேற்றனர்.