/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூழலியல் சார் ஆடை உற்பத்தியில் சிறக்கும் திருப்பூர்
/
சூழலியல் சார் ஆடை உற்பத்தியில் சிறக்கும் திருப்பூர்
சூழலியல் சார் ஆடை உற்பத்தியில் சிறக்கும் திருப்பூர்
சூழலியல் சார் ஆடை உற்பத்தியில் சிறக்கும் திருப்பூர்
ADDED : அக் 10, 2025 12:54 AM

திருப்பூர்; ''உலக அளவில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி கேந்திரங்களில், திருப்பூரில்தான் அதிக நிறுவனங்கள், சூழலியல் சார்ந்த ஆடை உற்பத்தியை சரியான முறையில் ஆவணப்படுத்துகின்றன'' என்று ஏற்றுமதியாளர்களுடன் நடந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கடைபிடிக்கப்படும் சூழலியல் மற்றும் சமூக நலன் உற்பத்தி கொள்கைகள் ஐரோப்பாவில் விரைவில் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நேற்று நடந்தது.
இத்தாலியை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் மேற்கொள்ளும் முன்னணி நிறுவனத்தின் சூழலியல் மற்றும் சமூக நலன் உற்பத்தி கோட்பாடுகள் துறையின் இயக்குனர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து, கலந்துரையாடினர்.
ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், திருப்பூரின் சூழலியல் மற்றும் சமூக நலன் சார்ந்த உற்பத்தி கோட்பாடுகள் குறித்தும், நடைமுறையில் உள்ள திட்டங்கள், அதற்கான கட்டுப்பாடுகள் குறித்தும் பேசினார்.
பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர் இளங்கோவன், இணைச்செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர், பல்வேறு நிலைகளில் உள்ள சூழலியல் மற்றும் சமூக நலன் கோட்பாட்டில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கி பேசினர். மறுசுழற்சி ஆடைகளை ஆவணப்படுத்தும் ரிவர்ஸ் ரிசோர்ஸ் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, 'உலக அளவில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி கேந்திரங்களில், திருப்பூரில்தான் அதிக நிறுவனங்கள், சூழலியல் சார்ந்த ஆடை உற்பத்தியை சரியான முறையில் ஆவணப்படுத்துகின்றன,' என்றனர்.