/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில தடகள ப் போட்டி திருப்பூர் மாணவியர் அபாரம்
/
மாநில தடகள ப் போட்டி திருப்பூர் மாணவியர் அபாரம்
ADDED : நவ 23, 2025 06:46 AM
திருப்பூர்: தஞ்சாவூரில் நடந்த மாநில தடகள போட்டியில், திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த வீராங்கனைகள், இரண்டாமிடம் பெற்று அசத்தியுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் அக்., 24 முதல் 30 வரை, தஞ்சாவூர், அன்னை சத்யா மைதானத்தில் 66 வது மாநில விளையாட்டு போட்டி நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 336 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தனிநபர், குழு போட்டிகளில் திறமை காட்டி அசத்தினர்.
போட்டி நிறைவில், இரண்டு தங்கம், ஏழு வெள்ளி, ஐந்து வெண்கலம் உட்பட 36 பதக்கங்களை கைப்பற்றி, திருப்பூர் மாவட்ட பள்ளி மாணவியர் அசத்தியுள்ளனர்.
வெற்றி பெற்றவர்கள் மாணவியர், 14 வயது பிரிவு, 400 மீ. ஓட்டத்தில் வெண்கலம், 600 மீ. ஓட்டத்தில் வெள்ளி, ஸ்ரீ வித்யா (ஆக்ஸ்போர்டு பள்ளி, உடுமலை), இதே பள்ளி மாணவி, ஸ்வதிகா, தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளி. மாணவி சோலமி, குண்டு எறிதலில் தங்கம், வட்டுஎறிதலில், வெள்ளி (ராஜா நேஷனல் பள்ளி, பொங்கலுார்).
மாணவியர், 17 வயது பிரிவில், 400 மீ. ஓட்டத்தில் பிரேமா - வெண்கலம் (பிளாட்டோஸ் அகாடமி, திருப்பூர்), வர்ஷிகா, 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் (ஜெய்வாபாய் பள்ளி), சுபிக் ஷா, 3000 மீ. ஓட்டத்தில், வெண்கலம் (ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா அம்மாபாளையம்), 4 x 400 மீ. ஓட்டத்தில், ஜெய்வாபாய் பள்ளி மாணவியர் குழு வெண்கலம்.
19 வயது பிரிவு, வர்ஷிதா, 200 மீ. ஓட்டம் வெண்கலம் (ஜெய்வாபாய் பள்ளி), பிருந்தா ஸ்ரீ 1500 மீ. ஓட்டத்தில் வெள்ளி, 3000 மீ. ஓட்டத்தில் வெள்ளி (அரசு மேல்நிலைப்பள்ளி, கருவலுார்), மதுவர்ஷா, 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளி (ஆக் ஸ்போர்டு மெட்ரிக், உடுமலை), 4 x 400 மீ. ஓட்டம் அம்மாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி, வெள்ளி. 19 வயது மாணவர் பிரிவில், விஷால், 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளி (சின்னச்சாமி அம்மாள் பள்ளி)
வேதனையில் வென்றோர்: மாநில அளவிலான போட்டியில், திருப்பூர் மாவட்ட வீராங்கனையர் வெற்றி பெற்று பெருமையுடன் திரும்பியுள்ளனர். ஆனால், பள்ளி கல்வித்துறையோ, மாவட்ட விளையாட்டுத்துறையோ தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவர்களை பாராட்ட முன்வரவில்லை. 20 நாட்கள் கடந்தும், கலெக்டரிடம் இருந்து ஒரு பாராட்டு கூட வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை என்கின்றனர் வீராங்கனையர்.

