/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
/
திருப்பூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
ADDED : ஜன 17, 2025 12:22 AM
திருப்பூர்; திருப்பூர், செல்லம் நகர் - பாரப்பாளையம் சாலையில், பெங்களூருவை சேர்ந்த ஒருவருக்கு, 30 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் ஒப்பந்தம் எதுவும் போடப்படாமல், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வாடகைக்கு விடப்பட்டது. திடீரென உரிமையாளர் தரப்பில் இடத்தை காலி செய்யுமாறு கூறிய போது, வாடகைக்கு இருப்பவர் மறுப்பு தெரிவித்தார். இட உரிமையாளர் திருப்பூர், சென்ட்ரல் போலீசில் அளித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி சி.எஸ்.ஆர்., பதிவு செய்தார்.
'சிவில்' புகாரை அலட்சியமாக கையாண்டதோடு, ஒருதரப்புக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து துணை கமிஷனர் ராஜராஜன் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டரை 'சஸ்பெண்ட்' செய்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.