ADDED : மார் 29, 2025 05:51 AM
ஆன்மிகம்
யுகாதி பண்டிகை
75ம் ஆண்டு யுகாதி விழா, ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், டி.பி.ஏ., காலனி, திருப்பூர். சீர் வரிசை எடுத்து வருதல் - காலை 6:00 மணி. ஸ்ரீ சொக்கநாயகி சமேத சிவலோகநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை - காலை 6:30 மணி. 'பட்சிகளாம் பறவைகளாம் பாடல்' புகழ் நவீன் பிரபஞ்ச நடனக்குழு வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.
பர்வதவர்த்தினி சமேத பரமசிவன் கோவில், கருமாரம்பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் காவடி பூஜை தீர்த்தம் எடுத்து வருதல் - காலை 6:00 மணி. ஸ்ரீ பரமசிவனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - மாலை 5:00 மணி.
மஹாயாக பெருவிழா
சனிப்பெயர்ச்சி மஹாயாக பெருவிழா, ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பொள்ளாச்சி ரோடு, பல்லடம். இரவு 7:00 மணி முதல்.
சிறப்பு பூஜை
ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பிரத்தியங்கிரா தேவி பீடம், வெங்கிட்டாபுரம், பல்லடம். அமாவாசை நிகும்பலா யாகம் - காலை 10:00 மணி.
பொங்கல் பூச்சாட்டு விழா
போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் - மாலை 5:00 மணி.
ஸ்ரீ மாரியம்மன் கோவில், சித்தம்பலம், பல்லடம். கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 7:00 மணி. அம்மன் அபிேஷக ஆராதனை - இரவு 8:00 மணி.
காமியார்த்த லட்சார்ச்சனை
ஒன்பதாம் ஆண்டு பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு, காமியார்த்த லட்சார்ச்சனை, ஸ்ரீ சனி சங்கடஹர அனுமன், ஸ்ரீ வானர ராஜசிம்மன் கோவில், ஓலப்பாளையம், காங்கயம். காலை 8:00 மணி.
பொது
கிராமசபை கூட்டம்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம், ஊராட்சி அலுவலகம், கருவலுார், அவிநாசி. காலை 10:00 மணி.
வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அரசு கலைக்கல்லுாரி, பல்லடம். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை.
கல்லுாரி ஆண்டு விழா
எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஆண்டு விழா, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி. பேரவை நிறைவு விழா - மதியம் 2:30 மணி.
வழிகாட்டுதல் முகாம்
பிளஸ் 2 மாணவருக்கான உயர்கல்வி வழிகாட்டுதல், ஆலோசனை முகாம், அறை எண்: 240, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
பிறந்த நாள் விழா
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., எம்.ஜி.ஆர்., நகர் - மாலை 6:00 மணி. மாரியம்மன் கோவில் திடல் - இரவு 7:00 மணி.
பயிற்சி வகுப்பு துவக்கம்
இரண்டு நாள் சிறப்பு அடிப்படை யோகா பயிற்சி, பத்மாவதிபுரம் அறிவுத்திருக்கோவில், சக்தி தியேட்டர் ரோடு, சிங்காரவேலன் நகர், திருப்பூர். காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.