sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக  திருப்பூர்

/

இன்று இனிதாக  திருப்பூர்

இன்று இனிதாக  திருப்பூர்

இன்று இனிதாக  திருப்பூர்


ADDED : மே 01, 2025 05:09 AM

Google News

ADDED : மே 01, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று இனிதாக

n ஆன்மிகம் n

தேர்த்திருவிழா கொடியேற்றம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. கொடியேற்றம் - காலை 7:30 மணி. 'அடியார்க்கு அடியேன்' எனும் தலைப்பில் தேசமங்கையர்க்கரசி ஆன்மிக சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை.

பொங்கல் விழா

ஆதிதெய்வம் சக்திமாரியம்மன் கோவில், ராம்ராஜ் நகர், துளசிராவ் வீதி, திருப்பூர். அம்மன் அழைத்தல் - மாலை 3:00 மணி. பொங்கல், மாவிளக்கு படைத்தல் - மாலை 4:00 மணி. சிறுவர் கலை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி. பூவாரி விடுதல் - நள்ளிரவு 12:00 மணி.

n பகவதி அம்மன் கோவில், நெருப்பெரிச்சல், திருப்பூர். மாவிளக்கு பூஜை - அதிகாலை 5:00 மணி. பொங்கல் பூஜை - காலை 10:00 மணி. அன்னதானம், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - மதியம் 12:00 மணி. மஞ்சள்நீர், பொங்கல் பூஜை, மறுபூஜை - இரவு 9:00 மணி.

n ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில், நல்லுார்பாளையம், வதம்பச்சேரி, சூலுார். மஞ்சள் நீராடுதல் - காலை 10:00 மணி. அன்னதானம் - காலை 11:00 மணி. உற்சவர் திருவீதி உலா - மாலை 3:00 மணி. ஸ்ரீ மகாலட்சுமி கலைக்குழு வள்ளி கும்மியாட்டம் - மாலை 6:30 மணி.

n கவுமாரியம்மன் கோவில், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ சந்தன கருப்பன் கோவில், ஸ்ரீ பாலமுருகன் கோவில், கொடிக்கம்பம், 50 அடி ரோடு, வ.உ.சி., நகர், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 6:00 மணி. அன்னதானம் - காலை 10:00 மணி. மஞ்சள் நீராட்டு விழா - மாலை 4:00 மணி. அம்மன் திருவீதி உலா - மாலை 6:00 மணி.

n மகா மாரியம்மன் கோவில், கைகாட்டிப்புதுார், அவிநாசி. மாவிளக்கு எடுத்தல் - காலை 6:00 மணி. அன்னதானம் - 8:00 மணி. பொங்கல் வைத்தல் - 9:00 மணி. அலங்கார பூஜை - மதியம் 12:00 மணி. முளைப்பாலிகை எடுத்தல் - மாலை 4:00 மணி. கம்பம் பிடுங்குதல் - மாலை 6:00 மணி.

n மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. நாதகாளி அலங்காரம் - காலை 10:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை.

ஈஸ்வரம்மா தின விழா

ஸ்ரீ சத்ய சாய் மந்திர், ராம் நகர், பி.என்., ரோடு, திருப்பூர். வேத மந்திரம் - மாலை 5:30 மணி. சாய் பஜன் - 5:40 மணி. சிறப்பு சொற்பொழிவு, பாலவிகாஸ் மாணவர்கள் கலை நிகழ்ச்சி - 6:00 மணி. பரிசு வழங்கல் - இரவு 8:00 மணி. மங்களஆரத்தி - 8:15 மணி. அன்னதானம் - 8:30 மணி.

மண்டல பூஜை

காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.

n பொது n

திறப்பு விழா

சுப்ரீம் மொபைல்ஸ் புதுப்பொலிவுடன் ேஷாரூம் திறப்பு விழா, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அரண்மனைப்புதுார், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர் சங்கம், தையல் நுால் வியாபாரிகள் சங்கம். காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

n தொழிலாளர் தின ரத்ததான முகாம், ஆயிர நகர வைசியர் திருமண மண்டபம், வெள்ளகோவில். ஏற்பாடு: ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பு, மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை. காலை 10:00 மணி.

பொது மருத்துவ முகாம்

இலவச பொது மருத்துவ முகாம், அல் நுார்ஜஹான் மதரஸா வளாகம், பிரியங்காநகர், திருப்பூர். ஏற்பாடு: அல் நுர்ஜஹான் மஸ்ஜித் சேவைக்குழு. காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

விழிப்புணர்வு நிகழ்வு

'இயற்கையோடு நடைபோட' நடைபயிற்சி விழிப்புணர்வு நிகழ்வு, தாமரைக்குளம் குளக்கரை, மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: குளம் காக்கும் அமைப்பு. காலை 7:00 மணி.

சான்றிதழ் வழங்கும் விழா

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் விழா, இந்தியன் ஆயில் பெட்ரோல் பாங்க் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன். காலை 10:30 மணி.

சிறப்பு யோகா வகுப்பு

அறிவுத்திருக்கோவில், சிங்காரவேலன் நகர், பத்மாவதிபுரம். ஏற்பாடு: திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஸ்கை யோகா அமைப்பு. காலை 6:00 முதல் 8:00 மணி வரை.

n 'ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா' - யோகா வகுப்பு, எஸ்.டி., மஹால், நாகம நாயக்கன் பட்டி, தண்ணீர் பந்தல், வெள்ளகோவில். காலை 6:00 முதல் 8:30 மணி வரை.

பொதுக்கூட்டம்

மே தின பொதுக்கூட்டம், ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகில், யூனியன் மில் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை, மாவட்ட நாம் தமிழர் பின்னலாடை மற்றும் நுாற்பாலை தொழிற்சங்கம். பங்கேற்பு: மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன். மாலை 4:00 மணி.

காது பரிசோதனை முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

சிறப்பு விற்பனை

அட்சய திருதியை சிறப்பு விற்பனை, நியூ லெட்சுமி ஜூவல்லரி, புதுமார்க்கெட் வீதி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

மாட்டுச்சந்தை

கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மாட்டுச்சந்தை, ஓலப்பாளையம் ஸ்டாப், காங்கயம் - வெள்ளகோவில் வழி. காலை 8:00 முதல்.






      Dinamalar
      Follow us