sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக திருப்பூர்

/

 இன்று இனிதாக திருப்பூர்

 இன்று இனிதாக திருப்பூர்

 இன்று இனிதாக திருப்பூர்


ADDED : ஜன 03, 2026 05:56 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n ஊஞ்சல் சேவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்க டேஸ்வர ஸ்வாமி எழுந்தருளல், ஊஞ்சல் சேவை, விவேகானந்தா குளோபல் அகாடமி, கணபதிபாளையம் பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர். மதியம் 1:00 மணி.

ஆருத்ரா தரிசன விழா வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், அய்யம்பாளையம், பல்லடம். மகா அபிேஷகம் - அதிகாலை 4:00 மணி. ஆருத்ரா தரிசனம், உபச்சார வழிபாடு - காலை 6:00 மணி. சுவாமி திருவீதி உலா - காலை 9:05 மணி. அன்னதானம் - மதியம் 1:00 மணி. திருமுறை பாராயணம் - மாலை 6:00 மணி. மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சி - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ சிவகாமியம்மை உடனுறை ஸ்ரீ நடராஜ பெருமான் கோவில், கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். அபிேஷகம், திருக்கல்யாண உற்சவம் - அதிகாலை 3:00 மணி. ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை, சுவாமி திருவீதி உலா - காலை 6:00 மணி.

n காசி விஸ்வநாதர் கோவில், டி.பி.ஏ. காலனி, திருப்பூர். ஆனந்த நடராஜ சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் - அதிகாலை 4:00 மணி. ஆருத்ரா தரிசன சிறப்பு அலங்காரம் - காலை 6:00 மணி.

n ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. நடராஜப் பெருமானுக்கு மகா அபிேஷகம் - அதிகாலை 5:00 மணி. மகா தீபாராதனை, தரிசனம், திருவீதி உலா, அன்னதானம் - காலை 8:00 மணி.

n ஸ்ரீ அலமேலு மங்கா நாச்சியார் சமேத, ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். ஆருத்ரா தரிசனம் - காலை 6:00 மணி.

n ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம் - அதிகாலை 3:00 மணி. ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை - காலை 6:00 மணி. ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனுறை ஸ்ரீ நடராஜ பெருமான் பட்டி சுற்றுதல்,திருவீதி உலா - காலை 10:00 மணி.

n பரமசிவன் கோவில், பல்லவராயன்பாளையம், பூமலுார், பல்லடம். வேள்வி வழிபாடு - அதிகாலை 5:00 மணி. அபிேஷகம், திருக்கல்யாண காட்சி - காலை 6:00 மணி. அன்னதானம் - காலை 8:00 மணி.

n விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன் கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ நடராஜர் அபிேஷகம் - அதிகாலை 3:00 மணி. ஆருத்ரா மகா தரிசனம், தீபாராதனை, சுவாமி பட்டி சுற்றுதல் - காலை 6:00 மணி.

சிறப்பு வழிபாடு சிறப்பு ஆருத்ரா தரிசன வழிபாடு, திருமாங்கல்ய பூஜை, பொதுக்கூட்ட திடல், பாண்டியன் நகர், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பா.ஜ. மாலை 4:00 மணி.

பவுர்ணமி பூஜை செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில், மடத்துப்பாளையம், அவிநாசி. பவுர்ணமி சிறப்பு பூஜை - இரவு 7:00 மணி.

பொன்னுாஞ்சல் விழா கொங்கு வேளாளர் பெரிய குல பெண் குழந்தைகளுக்கான பொன்னுாஞ்சல் விழா, பட்டக்காரர் வேணாவுடையார் அரண்மனை, சங்கராண்டம்பாளையம், தாராபுரம். காலை 9:00 மணி.

தொடர் சொற்பொழிவு 'திருமந்திரம்' தொடர் சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை. மாலை 4:30 மணி.

சிறப்பு பாராயண வழிபாடு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - வீரராகவ பெருமாள் கோவில். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம். அதிகாலை 5:00 மணி.

சிறப்பு நிகழ்ச்சி மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என். ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேதபாராயணம் - 6:30 மணி.

தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம், ஊஞ்சவிருத்தி - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.

n பொது n துவக்க விழா 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் 11ம் ஆண்டு விழா, மாதேசிலிங்கம் கோவில் நிலம், போலீஸ் ஸ்டேஷன் அருகில், மங்கலம். காலை 8:00 முதல் 10:00 மணி வரை.

உலக அமைதி வார விழா மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, பெரியார் காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். 'தொல்லியல் பார்வையில் தமிழகம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

n மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, அவிநாசி. 'அக்னி குஞ்சொன்று கண்டேன்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n அறிவுத்திருக்கோவில், சிங்கார வேலன் நகர், பத்மாவதிபுரம். காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

புத்தக கண்காட்சி 'புத்தகங்களுடன் புத்தாண்டை கொண்டாடுவோம்' தலைப்பில் புத்தக கண்காட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம், பி.என். ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

யோகாசன பயிற்சி எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்களுக்கு - அதிகாலை 5:15 முதல், காலை 7:30 மணி வரை. பெண்களுக்கு - காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us